×

மாவட்டத்தில் வறட்சி எதிரொலி தீவனப்புல் விற்பனை குடோன் திறக்க கோரிக்கை

தர்மபுரி, ஜன.8:தர்மபுரி மாவட்டத்தில் வறட்சி எதிரொலியாக, தீவனப்புல் விற்பனை குடோன்களை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு பருவமழை 50 சதவீதம் குறைந்து விட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகள் வறண்டு காணப்படுகிறது. ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் 1000 அடிக்கு கீழே சென்றுவிட்டது. விவசாய கிணறுகளும் வறண்டு விட்டதால் நிலக்கடலை, கரும்பு, சோளம், கம்பு உள்ளிட்ட அனைத்து பயிர்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. தீவன புல்லும் போதிய அளவிற்கு வளரவில்லை. இதனால் கால்நடைகளுக்கு தீவனப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டுகளாக மார்ச் மாதத்தில் தர்மபுரி மாவட்டத்தில் செட்டிக்கரை, இண்டூர், நல்லம்பள்ளி, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், மகேந்திரமங்கலம், அரூர், மொரப்பூர், மோளையானூர் மற்றும் புட்டிரெட்டிபட்டி ஆகிய கால்நடை மருந்தகங்களில் உலர் வன குடோன்கள் நிறுவப்பட்டு தீவனப்புல் விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டில் டிசம்பர் மாதத்திலேயே தீவனப்புல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தீவனப்புல் விற்பனை குடோன்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா